Breaking
Sun. Dec 22nd, 2024

– நூர் –

மறிச்சிகட்டி மக்களின் குடியேற்றத்தை சட்டவிரோதமானதாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மை இன சில அமைப்புக்களும் சில ஊடகங்களும் மேற்கொள்ளும் செயலை கண்டித்தும் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் உறவுகலுக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த வாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாடு பூராகவும் 2 லட்சம் கையெழுத்து பெரும் இந்த செயற்திட்டம் இன்று நாடு பூராகவும் இடம் பெற்றது

நாடு பூரகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையின் ஒரு அங்கம் இன்று சம்மாந்துறை ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகார பணிப்பாளரும்கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா வின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சம்மாந்துறையில் இன்று இடம்பெற்ற இந்த கையெழுத்து வேட்டையில் அதிகளவிலான மக்கள் தமது ஆதரவு கையெழுத்துக்களை வழங்கினர்.இளைஞர்களும் மிக ஆர்வத்துடன் தமது ஆதரவை மரிச்சிகட்டி மக்களுக்காக உற்சாகத்துடன் வழங்கியது இங்கு குறிப்பிட தக்கது.
இக் கையெழுத்து பெரும் வேலைத்திட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் சகீல் அப்துல் காதர்,சிவில் சமுக பிரதிநிதிகள்,வர்த்தகர்கள்,கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவு கையெழுத்துக்களை வழங்கினர்.பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் யாவும் விரைவில் உரியவர்களை சென்றடையசெய்வதற்கான பணிகளை தொடர இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Post