Breaking
Wed. Nov 20th, 2024

சம்மாந்துறையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வகுப்பறைக் கட்டிடத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (05) அல் அர்ஷத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நட்டி வைத்தார். இக்கட்டிடமானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக, அவரின் பிள்ளைகளினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது..

சம்மாந்துறையில் சுமார் 67 இற்கும் மேற்பட்ட விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில், மிக நீண்டகாலத் தேவையாக இக் கட்டடம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கு இம் மாணவர்களுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, குறித்த பாடசலையில் ஓர் அங்கமாக இப் பிரிவு இயங்கி வருகின்றது.

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.ஏ.மஜீட் மற்றும் குறித்த பிரிவின் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post