Breaking
Thu. Jan 9th, 2025
கலைமகன் 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும்  மக்கள் சந்திப்போன்று அண்மையில்  சம்மாந்துறையில்  இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் கிழக்கு மாகாண அமைப்பாளருமான  கணணி  பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா கலந்துகொண்டார்.
100க்கும் அதிகமான தமிழ் ,முஸ்லிம் பெண்களை உள்ளடக்கிய மகளிர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் மக்களின் மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் எமது சமுகத்தின் தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் எதிர்வரும் காலங்களில் தான் அங்கத்துவம் வகிக்கும் கட்சியினுடாக மக்களுக்கு முன்னெடுக்க இருக்கும் வேலை திட்டங்கள் சம்பந்தமாக தெளிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின் போது  கடந்த காலங்களில் எமது நாட்டில் சிறுபான்மை இனமக்களுக்கு இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போதும் கடந்த மாகாணசபை,ஜனாதிபதி தேர்தல்களின் போதும்  எமது தலைமைகல் மௌனம் சாதித்தபோது தொலைகாட்சிகள் வாயிலாக எதிர்ப்பை வெளியிட்டு வந்த அன்வர் எம் முஸ்தபாவின்  துணிகரமான செயலையும் மக்கள் பாராட்டினர்.
இம்மக்கள் சந்திப்பில் எழுத்தாளர்களான சமுன்,ஹுதா உமர் ஆகியோரும் சமுகம் அளித்திருந்தனர் .

Related Post