சம்மாந்துறை அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோருக்கு எழுத, வாசிக்க தெரியாமல் இருப்பது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டதோடு, நேற்று (17) அங்கு நேரடியாக சென்றும் பார்வையிட்டிருந்தார்.
அங்கு சென்று பார்க்கின்ற போது, அம்மாணவர்கள் அவ்வாறு குறை கூறும் அளவிற்கு இல்லை எனவும், அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அப்பாடசாலையில் காணப்படும் ஆசிரியர்கள் திறமையான ஆசிரியர்கள் எனவும், அவர்களுக்கு உரிய வளங்களை வழங்கி, அவ் ஆசிரியர்களை வளப்படுத்தி, அப் பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் உட்பட அதிபர், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
(ன)