Breaking
Sun. Nov 24th, 2024

ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொள்வார் என அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. இதே­வேளை இவ­ருக்கு “படை­யினர் நலன்­பு­ரிகள் அமைச்சர் ” பதவி வழங்­கப்­படும் என்றும் அறி­ய­வ­ரு­கி­றது.

இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பங்­காளிக் கட்­சி­யாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் ஜன­நா­யகக் கட்சி கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை இணைந்து கொண்­டது. இது தொடர்­பான இரு தரப்­புக்கும் இடையே புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க – சரத்­பொன்­சே­காவும் அல­ரி­மா­ளி­கையில் கையெ­ழுத்­திட்­டனர்.

இந்­நி­லையில் மறைந்த தேசியப் பட்­டியல் எம்.பி.யான எம்.கே.டி. எஸ்.குண­வர்­த­னவின் வெற்­றி­டத்­திற்கு சரத்­பொன்­சே­காவை நிய­மிப்­பது தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும், இது தொடர்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியின் விசேட செயற்­குழு கூட்டம் இன்று திங்­கட்­கி­ழமை கூட­வுள்­ள­தாவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இந் நிலையில் நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடும்­போது சரத்­பொன்­சேகா எம்.பி.யாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொள்­வா­ரென்றும் அதன்­பின்னர் அவ­ருக்கு படை­யினர் நலன்­புரி அமைச்சர் அல்­லது சட்டம் ஒழுங்கு பாது­காப்பு தொடர்­பான அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டலாம் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இவ் விடயம் தொடர்­பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா குறிப்­பி­டு­வ­தா­வது,

நான் எம்.பி.யாக பத­வி­யேற்­கின்­றமை தொடர்பில் இது­வ­ரையில் தீர்­மானம் எதுவும் எடுக்­கப்­பட வில்லை. எப்­போது என்­பது தெரி­யாது. அமைச்சர் பதவி வழங்­கு­வதா? இல்­லையா? என்­பதை ஜனா­தி­பதி பிர­த­ம­ருமே தீர்மானிக்க வேண்டும். நான் பாராளுமன்றம் வரவேண்டும் என்பது தொடர் பில் எம்.பி பதவி வெற்றிட மேற்படுவதற்கு முன்னரே பிரத மர் ரணில் விக்கிர மசிங்கவுடன் பேச்சுக்கள் இடம் பெற்றன என்றார். – நன்றி வீரகேசரி –

By

Related Post