Breaking
Tue. Jan 7th, 2025

சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து பதவிகள், பட்டங்களும் மீள அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத்தில் அவர் வகித்த முப்படைகளின் பிரதானி, இராணுவ தளபதி போன்ற பதவிகள் மற்றும் அவர் வசமிருந்து ஜெனரல் உள்ளிட்ட பட்டங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டதுடன் தேர்தல் தோல்வியின் பின் அவர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளைக் கொடி வழக்கு, ஹைகொப் வழக்கு போன்றவற்றில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார். மேலும் அவரது பதவி, பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

இந்நிலையில் சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்த நிலையில் சரத் பொன்சேகா இழந்த அனைத்தும் இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

Related Post