Breaking
Mon. Dec 23rd, 2024

ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே வித்­திட்டார். அதனை எதிர் கொள்­வது ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு ஒரு­வி­ட­ய­மே­யல்ல என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தற்­போது சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகம்கொடுக்க அஞ்­சு­கின்ற போதும் கடந்த காலங்­களில் அவரே சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான ஒப்­பந்­தங்­களில் கைச்சாத்­திட்டு விசா­ர­ணைக்கு வித்­திட்டார். அதன் பல­னா­கவே கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவும் இலங்­கையில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.
இது தொடர்பில் குற்­ற­மி­ழைத்த முன்னாள் ஜனா­தி­ப­திக்கு அச்­ச­மி­ருந்த போதும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அது ஒரு பொருட்­டல்ல. போர்­க்குற்றம், மனித உரிமை மீறல் செயற்­பா­டு­களில் ஒரு­போதும் ஈடு­ப­ட­வில்லை என்­பதால் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகம் கொடுக்க தயா­ராகவே உள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நாட்டை முகம் கொடுக்­கச்­செய்­த­துடன் ஐக்­கிய தேசியக் கட்சி நாட்டை பொறுப்­பேற்ற போது அதனை போதைப்­பொருள் மத்­தி­யஸ்­தா­ன­மாக மாற்­றி­ யி­ருந்தார்.

அதன் பின்னர் ஐக்­கிய தேசிய கட்­சியின் பாது­காப்பு செயற்பாடுக­ ளினால் நாட்டில் இருந்து போதைப் ­பொருள் வர்த்­தகம் கணி­ச­மான அளவு குறைக்­கப்­பட்ட போதும் தற்­போதும் நாட்டில். போதைப்­பொருள் வர்­தகம் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டே வரு­கி­றது. போதை­ப்பொருள் வர்­த்தகம் இன் னும் உள்­ள­மை­யி­னா­ல­லேயே ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்ட­மைப்பின் வெற்றிவாய்ப்பும் இன்று கணி­சமான அளவு குறைந்து போயுள்ளது.

எவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் நாட்டை சர்வதேச விசாரணையொன்றுக்கு முகம்கொடு க்க செய்யாத ஆட்சியொன்றினை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் என்றார்.

Related Post