மக்களுக்கு பெற்று கொள்ள முடியாது போன சகல வெற்றிகளையும், கிடைக்க பெற செய்வதே தமது நோக்கம் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரஜைகள் சக்தி அமைப்பு ஒழுங்கு செய்த ஒன்றிணைந்த மக்கள் சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது.
அந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் தினங்களில் தமது கொள்கை பிரகடனத்தை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, சர்வதிகாரத்திற்கான பாதை மூடப்படுகின்ற நேரம், தோல்விக்கான பாதை திறக்கப்படுவதாக குறிப்பிட்டார்.