Breaking
Mon. Dec 23rd, 2024
உள்ளகப்பொறிமுறை ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும், சர்வதேசத்திடம் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் மறைமுக அடக்குமுறை தொடர்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கொண்டு வந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மின்சாரக் கதிரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை காப்பாற்றி விட்டோம். சர்வதேசத்திடம் நாம் மண்டியிட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபகச் இரங்கையில் சிங்களத்தில் ஓர் அறிவிப்பையும் அமெரிக்காவிற்கு சென்று ஆங்கிலத்தில் வேறொரு அறிவிப்பையும், விடுக்கிறார். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் ஒரே அறிவிப்பை தான் விடுக்கின்றோம்.
தன்னை மின்சாரக்கதிரைக்கு கொண்டு செல்லப்போகின்றார்கள் என மஹிந்த ராஜபக்ச பேசி வந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர் அவர் அவ்வாறு ஒருநாளும் பேசவில்லை. அவர் இன்று பாதுகாக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.
அன்று நீங்கள் சர்வதேசத்திடம் மண்டியிட்டீர்கள் ஆனால் நாங்கள் மண்டியிடமாட்டோம். உள்ளக பொறிமுறையை உருவாக்கி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post