வருடந்தோரும் பிப்ரவரி 2 யில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஈரவல தினத்தினையொட்டியதாக நேற்று (13) நிந்தவூர் கமு அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் “ஈர நிலங்களும் உயிர் பல்வகைமையும்” எனும் கருப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாடாட்டில் நடாத்தப்பட்ட இவ் வைபவத்திற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு நிந்தவூரின் பல இடங்களிலும் மரக்கன்றுகளையும் நட்டுவைத்தார்.
இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், அதிபர்கள், கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் சுற்றாடல் கழக மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.