Breaking
Fri. Nov 15th, 2024

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. “அழகிய சிறுவர் உலகின் பாதுகாப்பிற்காக முதியோரே கரம் கொடுங்கள்” என்பது இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

சிறுவர்களுக்கு சமூகத்தில் உரிய பாதுகாப்பை வழங்கி நாட்டைமுன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு சிறந்த இடங்களாக குடும்பம், பாடசாலை, மற்றும் சமூகம் உட்பட்ட அனைத்து பிரிவுகளையும் கொண்டதான சமூக கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இநத வலிடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முதியவர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் கௌரவத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு உரிய போஷாக்கு, சுகாதார வசதிகளை வழங்கவும் கல்வி உரிமைகளை உறுதிப்படுத்தவும் பாதுகாப்பான சூழலை கட்டியெழுப்ப அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. இன, மதம் உட்பட பல்வேறு வகையான பிரிவினைகள் பிள்ளைகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post