மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும். எமது அறிக்கையில் நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை. அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் இலங்கையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தில் அவ்வாறான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும். எனவே இங்கு சர்வதேச நீதிமன்றம் என்ற விவகாரம் விவாதத்திற்குட்படவேண்டிய அவசியமில்லை. இது இலங்கையின் செயற்பாடாகவே அமையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார்.
பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவேண்டுமென்பதாகும். இந்த செயற்பாட்டை சர்வதேச பங்களிப்பின் ஊடாக செய்ய முடியும் என நாம் கருதுகின்றோம். ஆனால் மாற்றமான கருத்துக்கள் இருக்கலாம். மிகவும் முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டியது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செய்ட் அல் ஹுசேன் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் நேற்று(10) மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.