16 வது சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் 165 உள்நாட்டு வெளியீட்டாளர்களும் 36 வெளிநாட்டு வெளியீட்டாளர்களும் பங்களிப்பு செய்யவுள்ளனர். மேலும் தரமான குழந்தைக் கல்விக்கான விளையாட்டுப் பொருட்கள், பயிற்சிப் புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.