Breaking
Sun. Jan 12th, 2025
ஏ.எச்.எம். பூமுதீன்
இலங்கையில் தேசிய அளவில் அகல கால்பதித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிநாமமாக சர்வதேச ரீதியில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கட்சி கால்பதித்துள்ளது.
இலங்கையில் – பொதுவாக தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் கட்சியும் கடசியின் தேசியத் தலைமையான அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பெற்று வரும் நல்ல அபிப்ராயத்தை அடுத்தே சர்வதேச ரீதியாக வாழும் இலங்கையர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து கொள்வதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்துள்ளது.
இந்த அடியாகப்படையில் சர்வதேச ரீதி வாழும் இலங்கையர்கள் விடுத்த  வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள கட்சியும் கட்சியின் தேசியத் தலைமையும் இன்று கட்சிக்கிளைகளை சர்வதேச ரீதியாக விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
அண்மைக்காலமாக முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு எதிராக அ.இ.ம.கா வும் அதன் தலைமையான ரிசாத் பதியுதீனதும் குரல் ஓங்கி ஒலித்து சர்வதேசம் வரை எட்டியிருந்தது. அதன் பிரதிபலிப்பே இன்று கட்சிக் கிளைகள் சர்வதேசரீதியாக உதயமாகுவதற்கு காரணமாகும்.
அ.இ.ம.காங்கிரஸின் உயர் பீடம் தீர்மானித்ததற்கமைய  – கட்டார் வாழ் இலங்கையர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கட்சியின் முதலாவது சர்வதேசக் கிளை கடந்த மாதம் கட்டாரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சர்வதேச ரீதியாக கட்சியை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தில் மற்றுமொரு மைல்கல்லாக கட்சியின் இரண்டாவது சர்வதேச கிளையும் – ஐரோப்பிய நாடொன்றில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் முதலாவது கிளையாகவும் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படும் பிரான்ஸ் கிளை திகழ்கின்றது.
ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில்  ஒஸ்ரியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த அ.இ.ம.காவின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் – அங்கிருந்தவாறு பிரான்ஸ் நாட்டை இன்று – சென்றடைந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டுக்கான அமைச்சரின் விஜயம்  அங்கு வாழும் இலங்கையர்காளல் பெரும் வரவேற்புடன் நோக்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டில் வதியும்  இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணியின் முன்னாள் வீரரதான மருதமுனையைச் சேர்ந்த அப்துல் ரவுப் அமைச்சரின் ஊடகப்பிரிவுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கருத்து வெளிப்படுத்தினார்.
பிரான்ஸில் வாழும் இலங்கையர்கள் நீண்ட காலமாக விடுத்து வந்த வேண்டுகோளை அடுத்தே கட்சியின் கிளை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது.
இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சியின் பிரான்ஸ் கிளையை உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் அங்கத்தவர்களுக்கும் கட்சியின் உறுப்புரிமையை வழங்கவுள்ளார்.
 அ.இ.ம.காவின் பிரான்ஸ் கிளையின் நிர்வாக குழுவையும் கட்சியின் தேசியத் தலைவர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வ அங்கிகாரத்தையும் வழங்கவுள்ளார்
பிரான்ஸ் நாட்டுக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒஸ்ரியா விமான நிலையத்தில் இருந்து அமைச்சரின் ஊடகப்பிரிவுடன் தொடர்புகொண்ட அமைச்சர், பிரான்ஸ் நாட்டில் கட்சியின் கிளையை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதில் பெரும்  மகிழ்சி அடைவதாகவும் – இது சர்வதேச ரீதியாக கட்சிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டார்.

Related Post