Breaking
Sun. Dec 22nd, 2024

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கு அண்மையில் வெடித்து சிதறியதன் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் குறித்த இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீட்டு தோட்டத்தில் மேலும் ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டு தோட்டத்தை துப்பரவு செய்துக் கொண்டிருக்கும் போது நிலத்துக்கு கீழ் புதைந்து கிடந்த வெடி குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டு ஒன்றின் மேல் பகுதியே இவ்வாறு வெடித்துள்ளதாகவும், வெடிப்பு சத்தம் தூர பகுதிக்கு கேட்டுள்ள போதிலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலைமையில் வீட்டு தோட்டத்தில் நடமாடும் போது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்திலே இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கில் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் நட்டம் ஏற்பட்டதுடன் பல வீடுகள் சேதமடைந்திருந்தன.

குறித்த ஆயுத கிடங்கிலிருந்து பல கனரக ஆயுதங்கள் அந்தப் பிரதேசத்தின் பல பகுதிகளில் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post