Breaking
Sun. Dec 22nd, 2024

சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலாவ இராணுவ முகாம் வெடி விபத்துச் சம்பவத்தில் முற்றுமுழுதாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை தமது அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து சமர்ப்பிக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி சலாவ இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து அண்டைய பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகள் பாரியளவில் சேதமடைந்திருந்தன.

இதேவேளை, விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 ரூபா வரையில் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த கொடுப்பனவை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

By

Related Post