உலக வர்த்தக அமையத்தின் வர்த்தக ஒப்பந்தங்களை தாண்டி ட்ரான்ஸ் – பசுபிக் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றால் இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பிலான பட்டறை இன்று (16/03/2016) கொழும்பு, கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், இவ்வாறான ஒப்பந்தங்களால் இலங்கை போன்ற நாடுகள் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றன என்பது குறித்து ஆராயப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என்று தனதுரையில் சுட்டிக் காட்டினார். இந்தப் பட்டறையில் பொதுநாலவாயத்தைச் சேர்ந்த பல நாடுகள் பங்கேற்றுள்ள