Breaking
Thu. Dec 26th, 2024

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் அவர் பணியாற்றிய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பெண் வீட்டில் உள்ள குளியலறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளியலறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், வீட்டு எஜமான் கதவை தட்டியுள்ளார். உள்ளே இருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அவர் கதவை உடைத்து திறந்த போது பெண் இறந்து கிடந்துள்ளார்.

இலங்கை பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எந்த காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் சவூதி அரேபிய பொலிஸ் பேச்சாளர் கேர்ணல் சஹிட் அல் ருகாதி தெரிவித்தார்.சவுதி அரேபியாவின் வடபகுதி நகரான காப்ஜி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Related Post