Breaking
Tue. Jan 7th, 2025

மௌலவி செய்யது அலி ஃபைஜி

சவுதி அரேபியாவின் மன்னாராக சுமார் 100 நாட்களுக்கு முன்பு பதவியேற்ற மன்னர் சல்மான் தொடர்ந்து அதிரடியாக செயலாற்றி வருகிறார்

நீண்ட நெடுகாலத்திர்கு பிறகு சவுதி அரேபியாவிர்கு ஒரு சிறப்பான தலைமை கிடைத்திருப்பதாக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இந்த 100 நாட்களில் அதிரடியான 50 அரசாணைகளை பிரப்பித்து சவுதி மக்களுக்கு மட்டும் இன்றி ஏமன் ஏஜிப்ட் பர்மா சிரியா பலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள உலக முஸ்லிம்கள் பயன் பெறும் விதத்தில் பல்வேறு நலபணிகளை செய்தார்

சவுதிஅரேபியாவிர்கு கிடைத்துள்ள சிறந்த தலைமை தன்னோடு நின்றுவிட கூடாது என்பதர்காக துடிப்பான ஆற்றல் மிக்க இரண்டு இளைஞர்களை சவுதியில் தனக்கு பிறகு அதிகாரத்திர்கு வரும் விதத்தில் இளவரசர்களாக அறிவித்துள்ளர்

ஒருவர் முஹம்மது பின் நாயிப் மற்றவர் முஹம்மது பின் சல்மான்

சவுதிக்கு எதிராக இருந்த பல்வேறு தீவிர வாத குழுக்களை திறமையுடன் சமாளித்து அதை முறி அடித்தவர் முஹம்மது பின் நாயிப்

அது போல் ஏமன் போரை திறமையாக நடத்தி கொண்டிருப்பவர் முஹம்மது பின் சல்மான்

இவர்களின் இந்த சிறப்பான செயல்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் அவர்கள் இருவரையும் இளவரசர்களான அறிவித்து அவர்களுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் சவுதி மன்னர் சல்மான்

சவுதி அரேபியாவின் நிர்வாகத்தை தோழில் சுமப்பவர்களாகவும் சவுதி அரேபியாவின் எதிர்காலம் என சவுதி மன்னர் சல்மானால் அடையாளபடுத்து பட்டுள்ள இரண்டு இளவரசர்களை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

Related Post