இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சவுதியின் பிரதி இளவரசர் முக்ரின் பின் அப்துல் ஹசீசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் விடுத்துள்ளார்.
சவுதி அரேபிய ஜெடா நகரில் இடம் பெற்ற சந்திப்பொன்றில் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தாhக அராப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர், சமாதானம் எவ்வாறு பேணப்படுகின்றது என்பது தொடர்பாக இந்த விஜயத்தின் போது பிரதி இளவரசர நேரடியாக அவதானிக்கலாம் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சவுதி அரேபிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கான விஷேட செயற்திட்டம் ஒன்றை தாம் முன் எடுப்பதாகவும் இலங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.