Breaking
Sat. Dec 28th, 2024

சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மொளலவி எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது.

இதில் சவூதி அரேபிய பிரதி நிதி, சவூதிஅரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற உதவிய புனித ஹரம் ஸரீபில் கடமையாற்றும் ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவர், பொதுச்செயலாளர் , முஸ்லிம் கலாசார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் நிறுவன தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

ri3.jpg2_3.jpg3_3 ri.jpg2_.jpg4_.jpg5_

By

Related Post