அதிரைஉபயா
உங்களிடம் யாராவது குறிப்பாக எமனி(ஏமன் நாட்டவர் மற்றும் பாகிஸ்தான் ) (“எனக்கு உடனடியாக பணம் தேவைபடுவதாக கூறி விலை உயர்ந்த மோபைலை காட்டி இதை மிக குறைந்த விலைக்கு தருகிறேன் என சொல்லி தந்தால் வாங்கிவிடாதீர்கள்.
“ஐய் நல்லா ஏமாந்துட்டான் வந்தவரை லாபம்” என நினைத்து வாங்கினால் ஏமாறுவது நீங்களாகதான் இருக்கும். காரணம் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் போலி சைனா மோபைலை உங்கள் கையில்கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிடுவார்கள். அல்லது
எங்காவது திருடிய மோபைலோ அல்லது கீழே கிடந்து எடுத்த மொபைலையோ உங்களிடம் விற்றுவிடுவார்கள் அதை நீங்கள் அன்லாக் செய்ய முற்பட்டாலோ, உபயோகிக்க ஆரம்பித்தாலோ உங்ள் வீட்டு வாசலில் போலீஸ் வந்து நிற்கும்.
இப்பொழுது சவூதியில் தம்மாம்,ரியாத்,ஜிசான்,ஜித்தா போன்ற நகரங்களில் பரவலாக இந்த ஏமாற்றுவேலை நடக்கிறது. இதில் அதிகமாக விவரமில்லாத நம் தமிழர்களே ஏமாறுகிறார்கள். ஏமாந்துவிடாமல் விழிப்போடு இ்ருங்கள். இச்செய்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நினைத்தால் சேர் (SHARE) செய்யவும்.