Breaking
Sun. Dec 22nd, 2024

சவுதி அரேபியாவில் விளையாடும்போது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறிவிழுந்து சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தையை உயிருடன் காப்பாற்ற அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய போராட்டம், ‘வைரல்’ புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களை கலக்கி வருகின்றது.

பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், வாஷிங் மெஷினை வெட்டி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு மழையும், அந்த குழந்தைக்கு இந்தகதி ஏற்பட காரணமாக இருந்த தாயின் அஜாக்கிரதைக்கு வசை மழையும் பெருகி வருகின்றது.

அந்த தாய்க்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் சில தாய்மார்கள், ‘சில குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென குறும்பு வேலைகளை செய்வதிலேயே குறியாக இருக்கும்போது, நாம் எவ்வளவு கண்டித்தாலும், விளையாட்டு புத்தியில் இதைப்போல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன’ என்றும் கூறி வருகின்றனர்.

Related Post