அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட குடியரசு கட்சி சார்பில் ஆதரவு திரட்டி வரும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து வருகிறார்.
விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய ட்ரம்ப், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் அமைந்துள்ள நாடுகள்) வருந்த வேண்டும், இல்லாவிட்டால் நேட்டோ அமைப்பையே கலைத்துவிட வேண்டுமென கூறினார்.
இதேபோல், சவூதி அரேபியாவின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் சவூதியிடம் யாரும் வாலாட்டுவதில்லை.
ஆனால், இதற்கு நியாயமான கைமாறாக சவூதி நமக்கு ஒன்றுமே செய்வதில்லை. அவர்களுக்கு உதவிசெய்து, உதவிசெய்து நம்முடைய சட்டைதான் தளர்ந்து போகிறது (நாம் இளைத்துப் போகிறோம்) என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.