இலங்கையில் 7 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், நாடு திரும்பும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜமாஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த தூதுவர் மேற்கொண்ட பணிகளை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் செயற்படுத்தி வரும் வேலைத்திட்டங்களுக்கு சவூதி அரேபியா தொடர்ந்தும் உதவும் என அப்துல் அசீஸ் அல் ஜமாஸ் கூறியுள்ளார்.
அத்துடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.