சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றி வந்த இந்த இலங்கை பிரஜைகளின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி அந்நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இலங்கை பிரஜையிடம் இழப்பீட்டை பெற்றுக்கு மன்னிப்பு வழங்கினார். இதனையடுத்து அவர் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
உயிரிழந்தவரின் தந்தைக்கு மூன்று லட்சம் ரியால்களை இழப்பீடாக வழங்குமாறு இலங்கை பிரஜைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.