Breaking
Fri. Nov 22nd, 2024

சிரியா மீது சவூதி அரே­பியா தனது துருப்­பு­களை நகர்த்­தி­ய­மைக்கு  ஈரான் கடும்  எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இது குறித்து நேற்று முன்­தினம்  (16) பிர­ஸெல்ஸின் ஐரோப்­பிய நாடா­ளு­மன்­றத்தில் நடந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஈரா­னிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷெரீப்,  இது சர்­வ­தேச சட்­டத்தை மீறும் ஒரு செய­லாகும் என்றும் குற்றஞ்சுமத்­தி­யுள்ளார்.

இத­னி­டையே சிரி­யாவின் ஜனா­தி­பதி பஷர் அல் அஸாத்­திற்கு ஆத­ர­வாக படைகள் செயற்­பட்டு வரு­கின்ற நிலையில், இறை­மை­யுள்ள நாட்டின் மீது அனு­மதி இல்­லாமல் படையை சவூதி தரைப்­ப­டையை அனுப்­புவது குறித்தும் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இது ஒரு அபா­ய­க­ர­மான விட­ய­மென நாம் உட்­பட அனை­வரும் நம்­பு­கின்றோம். இதற்கு ஒரு சமா­தா­ன­மான முடி­வினைப் பெறு­வ­தற்­காக நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். மாறாக மென்­மேலும் ஆபத்தினை ஏற்­ப­டுத்தல் ஆகாது என அவர் கூறி­யுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சவூ­தியின் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் அமைச்சர் அதெல் அல் ஜூபிர் கூறுகையில், அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்டுப்படையில் தலைமையேற்று செயற்படவேண்டிய பொறுப்பு சவூதிக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

By

Related Post