சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி
சவூதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது….
குண்டுவெடிப்பு சம்பந்தமாக வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வுகளை வைத்து காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அதிரடி வேட்டையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டியவர்கள், பின்னணியில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் அடையாளம் காட்டப்படுவார்கள்.
இறைவனோ, இறைவனின் தூதரோ இதுப்போன்று ஒரு கலாச்சாரத்தை நமக்கு கற்று தரவில்லை.
வழிபாட்டு தலங்களுக்கு உள்ளே வெடிகுண்டை வெடிக்க செய்பவன் முஸ்லிம் என்று தனக்கு பெயர் வைத்து கொண்டாலும் அவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது
அமைதியையும், அறத்தையும் போதிக்கும் ஒரு மார்க்கத்தில் இருந்து கொண்டு இதுபோன்று செயலாற்றுவது அந்த மார்க்கத்தின் புனிதத்தை கெடுக்கும் செயலாகும்.
எனவே இந்த செயலை செய்தவர்கள் இந்த செயலில் தொடர்புடையவர்கள், அதற்காக திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் இனி இதுபோன்று ஒரு செயலை சிந்திக்க முடியாத அளவிற்கு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
மேலும் இந்த நாட்டின் அமைதியை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாம் யாருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்.