Breaking
Fri. Jan 10th, 2025

ஊடகப் பிரிவு

நேற்று அதிகாலை வபாத்தான சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ்; அவர்களின் நினைவாக இலங்கை ஹோட்டன் பிளேஸில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு புத்தகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தமது இரங்கற் குறிப்பினைனை எழுதினார்.

அதேவேளை, அப்துல்லா அப்துல் அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் பொருட்டும்,இலங்கை முஸ்லிம்களினதும்,அரசினதும் பிரதி நிதிகளின் குழுவில் ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று(2015.01.23)இரவு 9.45 மணியளவில் இலங்கையில் இருந்து றியாதுக்கு பயணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post