Breaking
Sun. Dec 29th, 2024
Russian President Vladimir Putin shakes hands with Saudi Arabia's Defense Minister Prince Mohammed Bin Salman in the Konstantin Palace outside St. Petersburg, Russia, Thursday, June 18, 2015. (Mikhail Klimentyev/RIA-Novosti, Kremlin Pool Photo via AP)

வரலாற்றில் முதல்முறையாக சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்ற வாரம் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேச பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளது. குறிப்பாக, அணு உலைகளை உருவாக்குவது, அணுசக்தி எரிபொருளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும், கதிரியக்க ஆபத்துகள் நிறைந்த அணுக்கழிவுகளின் பிரச்சனைகளை சந்திப்பதிலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளது.

இதுவரை சவூதி அரேபியாவில் எந்த அணு உலைகளும் உருவாக்கப்படவில்லை. எனினும், அணுசக்தியை உற்பத்தி செய்வதில் சமீப காலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறது சவூதி அரேபியா.

Related Post