குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வதெல்லாம் ‘தோட்டி’ களின் (கீழ் சாதி) வேலை என்று ஒரு மரபு இருந்தது தமிழகத்தில். அந்த மரபை உடைத்து சென்னையை சுத்தம் செய்கிறோம் என்று அறிவித்து 30000 இளைஞர்களை களத்தில் இறக்கியது தவ்ஹீத் ஜமாத். தமிழக அரசே என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் போது மள மள வென்று இளைஞர்கள் களத்தில் இறங்கினர். அவர்களோடு சேர்ந்து தமுமுகவும், எஸ்டிபிஐயும் துப்புரவு தன்னார்வலர்களை களத்தில் இறங்கியது.
உடன் காட்சிகள் மாறத் தொடங்கியது. வைகோ துடைப்பத்தோடு வந்தார்: திருமா வளவனும் சுத்தம் செய்ய களத்தில் இறங்கினார்: சினிமா கூத்தாடிகளும் துடைப்பத்தோடு களத்தில் இறங்கினர்.
எல்லாவற்றையும் பார்த்து திகைத்துப் போன பிஜேபியின் ராஜாவும் சாக்கடையை சுத்தம் செய்ய களத்தில் இறங்கினார். இந்த வேலையை இவன்தான் செய்ய வேண்டும் என்று கால காலமாக கட்டிக் காத்து வந்த வர்ணாசிரம கோட்பாடு நொடியில் அடித்து நொறுக்கப்பட்டது. அவாள்களையும் வேறு வழியின்றி துடைப்பத்தை பிடிக்க வைத்தமைக்காக ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு’ ஒரு ஓ போடுவோம். 🙂
எல்லா புகழும் இறைவனுக்கே!