பிரபலமான துரித உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனமான மெக்டொனால்டின் வருவாய் சரிந்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டிற்கான வருவாய் கணக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் வருவாய்யானது 13.3 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இது டாலர் மதிப்பில் 1.2 பில்லியன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஆசிய நாடுகளில் அதன் விற்பனை 4.5 சதவீதம் சரிந்துள்ளது. சொந்த நாடான அமெரிக்காவில் விற்பனை சரிவானது 2 சதவீதமாக உள்ளது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் மெக்டொனால்டு விற்பனை 0.7 சதவீதம் சரிந்துள்ளது.
ஆனால் இங்கிலாந்து மற்றும் ஜெரிமனியில் மெக்டொனால்டு விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.