Breaking
Mon. Dec 23rd, 2024

சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், சமூக பற்றாளருமான எஸ்.ரீ. கபீரின் மறைவு  வருத்தம் தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அயராது பாடுபட்டு உழைத்த அவர், கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார்.  சாய்ந்தமருதுவிலும் , அம்பாறை மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்த அன்னார், மக்கள் சேவைக்காக தன்னை பெரிதும் அர்ப்பணித்தவர்.

பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தனது சமூக பணிகளையும் மேற்கொண்டுவந்தார். அன்னாரின் மறைவிற்காக வருத்தம் தெரிவிப்பதுடன்,  அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். 

அவருடைய மறுமை வாழ்வுக்கு பிரார்த்தனை செய்தவனாக, ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் நுழைய இறைவன் அருள் புரிவானாக.

ஊடகப்பிரிவு-

Related Post