Breaking
Thu. Dec 26th, 2024

– அகமட் எஸ். முகைடீன் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனின் சாய்ந்தமருது மக்கள் சந்திப்பும் நன்றி நவில்தல் நிகழ்வும் (12.09.2015) சனிக்கிழமை மாலை 9 மணியளவில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் சாய்ந்தமருது இல்லத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய சிராஸ் மீராசாஹிப் தலைமையில் பெருந்திரளான ஆதரவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன், கிராமிய கைத்தொழில் பிரதி அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான இஸ்ஹாக் ஹஜி, மஹ்ரூப், நபவி மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் 2015ல் களமிறங்கியது. இக்கட்சிக்கு 33,000க்கும் அதிகமான மக்கள் வாக்களித்திருந்தபோதிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறப்படவில்லை. வாக்களித்த மக்களுக்கு நன்றிப் பூக்களை காணிக்கையாக்கும் வகையிலே மேற் குறிப்பிட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்டாண்டு காலமாக அம்பாறை மாவட்ட மக்கள் பல கட்சிகளுக்கு வாக்கழித்து வெற்றிபெறச் செய்திருந்த போதிலும் அக்கட்சிகளின் தலைமைகள் இம்மக்களைச் சந்தித்து நன்றி பாராட்டியது கிடையாது. ஆனால் பிரதிநிதித்துவம் எதனையும் பெற்றிராத நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களை சந்தித்து நன்றி பாராட்டியிருப்பது அக்கட்சி தலைமையில் மனிதப் பண்பினையும் தலைமைத்துவப் பண்பினையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

a r1.jpg2_1 rr7 rr4.jpg2_4 rr1.jpg2_1.jpg3_1 rr.jpg2_.jpg3_.jpg4_

Related Post