வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சாரதிகளுக்கு புள்ளியிடும் நடைமுறை இந்த வருடம் முதல் அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளியிடும் நடவடிக்கைக்கு ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடைமுறை சிக்கல்களை சரி செய்துக் கொண்டு இந்த ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புள்ளியிடும் நடைமுறையின் ஊடாக சாரதிகளினால் இழைக்கப்படுகின்ற தவறுகளுக்கு புள்ளிகள் இடப்படுவதுடன், அந்த புள்ளி குறிப்பிட்ட எல்லையை தாண்டும் பட்சத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை இரத்து செய்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.