Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு அட்டன் பிராதான வீதியில் கித்துள்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற ஒருவர் கினிகத்தேன வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கித்துள்கலை பொலிஸ்பிரிவிற்குட்பட்டு கலுகல பகுதியிலே இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து அட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி கலுகல சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமுற்ற சாரதி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் மலசலகூடம், பாடசாலை மதில் என்பன சேதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சாரதியின் நித்திரை கலக்கத்தினாலே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் கித்துள்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post