Breaking
Tue. Mar 18th, 2025

அரபு நாடுகளில் முழுஆண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்து, 2015-16 கல்வியாண்டில் முதல் நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

சார்ஜாவில் வாழும் ஒருவர் முதல் நாளாக பள்ளிக்குச் சென்ற தனது இரு மகள்களை காரில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெடுஞ்சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி மோதியதில் அவர்கள் மூன்று பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து சேர்வதற்குள் அந்த தந்தையும் அவரது இரு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் சார்ஜாவை சேர்ந்தவர்களா? வெளிநாட்டில் இருந்து வேலை தேடி சார்ஜாவில் வந்து குடியேறியவர்களா? எனபது தொடர்பான தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை.

Related Post