சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு தீப்பரவல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குஉதவவென்று 12 சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அந்தப்பிரதேச மக்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வர 50ஆயிரம்படைவீரர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இலங்கையின் இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாலாவ தீப்பரவல் தொடர்பில் ஏற்பட்ட சேதங்களுக்காக தாம் பொதுமக்களிடம் மன்னிப்பை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினால் பொதுமக்களும் இராணுவத்தினரும் பாரிய பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவிசாவளையில் செய்தியாளர்களை சத்தித்தபோது இந்த கருத்துக்களை அவர்வெளியிட்டுள்ளார்.