Breaking
Tue. Dec 24th, 2024
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக்களஞ்சியத்தை பொலிஸார் திறந்துள்ளனர்.
அங்கு மறைத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாநாட்டு மண்டப வளாகத்தில் ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான 23 கொள்கலன்கள் காணப்படுகின்றது. இதில் அதி நவீன ஆயுதங்கள் காணப்படுகிறது.
எனவே இந்த ஆயுதங்கள் எதற்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post