Breaking
Sun. Dec 22nd, 2024

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் சிங்கப்பூரின் நீண்ட நாள் ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமை உடையவர்.

92 வயதான அவர் கடந்த ஜூலை 31ம் திகதி பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், ஜனாதிபதி டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

எஸ். ஆர். நாதன் 1999ல் சிங்கப்பூரின் ஆறாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். 2011ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் அவர் அப் பதவியில் இருந்தார்.

சிங்கப்பூர் தமிழரான அவர் 1924ம் ஆண்டு ஜூலை 3ம் திகதி பிறந்தார். சிங்கப்பூர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1955ல் மருத்துவ சமூக அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

பின்னர் வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் துாதர் என படிப்படியாக பல முக்கிய பதவிகளில் வகித்து இறுதியில் சிங்கப்பூர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

By

Related Post