ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் பலருக்கு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாரிய தேவை இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரச்சினைகள் என்பது சிறுபான்மை இனத்தவருக்கு மாத்திரம் இருப்பதில்லை சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி நல்லாட்சி அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை.
புத்தசாசனத்திற்கு அமைச்சர்கள் இல்லை. பொறுப்பான பௌத்த தலைவர் ஒருவர் இல்லை எனவும் ஞானசார தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.