நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதுடன், சிங்கள- பௌத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயருமான இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு மூவின மக்களையும் சரிசமமாக கருத்தில் கொள்ளும் ஒருவரையே ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசின் ஒட்டுண்ணித் தாவரங்கள் போன்றே இருக்கவேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இணையத்தளமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (k)