இக்பால் அலி
மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் நாமே சிங்கள கிராமவாசிகள் ஒன்றிணைந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை மேலும் உறவை வலுப்படுத்தும் வகையிலான நிகழ்வு நேற்று 09-11-2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊர்ப் பெரியார் ஏ, டி. குனவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதில் விசேடமாக பௌத்த மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களுடைய ஆசிவுரை நடைபெற்றது. உமங்கல சங்கரத்ன வெலிமடை தம்மரத்தன தேரர் சார்பாக வருகை தந்த கந்தகருவே தேவரத்ன தேரர் மற்றும் கோமன்கடவல தேரர், நாமே ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ; இமாம் அஷ;nஷய்க் எம். எப். எம். ருமைஸ் ஆகிய சமயப் பெரியார்கள் கலந்து கொண்டர்
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மாவத்தகம பொலிஸ் பிரிவின் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பொலிஸ் பொறுப்பத்திகாரி குனசேகர மற்றும் மாவத்தகம ஐடெக் லங்கா கல்வி நிறுவனத்தின் பணிபாளர் ஏ. என். சீ. எஸ். குமார ஆகியர்வகள் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களுடைய பாரம்பரிய சவன் சாப்பாட்டு முறையில் இங்கு வருகை தந்த இப்பிரதேச முஸ்லிம் மக்களுக்கு பகல் உணவு வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது