இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச உள்ளிட்ட சில சந்தேக நபர்களும் ஹோமாகம நீதிமன்ற கலகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் குறித்த பௌத்த பிக்குளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக சிறைச்சாலைத் திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடத்தே ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.