Breaking
Mon. Dec 23rd, 2024
கோல்டன் கீ நிதிமுறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை நேற்று (25) சீஐடிக்கு பிறப்பித்தார்.

கோல்டன் கீ வழக்கில் வாடிக்கையாளர்களின் 4.3 மில்லியன் சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டே சிசிலியா மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிசிலியாவின் தங்க நகைகளை விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் வைப்புக்களை மீளச்செலுத்தமுடியுமா? என்பது குறித்து ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட சிசிலியாவை மார்ச் 9 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

By

Related Post