Breaking
Mon. Dec 23rd, 2024

லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலையின் பிணை மனுமீதான தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செலிங்கோ குழும நிதிமோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிசிலியா நேற்று (19) கொழும்பு கோட்டை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் லண்டன் மற்றும் வேறு பல இடங்களில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதற்கான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சிசிலியாவின் வழக்கறிஞர்கள் அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தனர்.

எனினும், பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி லங்கா ஜயரத்ன, அதுவரை சிசிலியாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

By

Related Post