கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பு மும்முனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசேட இராணுவ நீதிமன்றம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதவான் விசாரணை என்பன தனித்தனியாக இடம்பெற்றுவருகின்றன.
மேலும் தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுத்ப்பட்டிருந்த பகுதி இப்போது 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் 6 கிலோமீற்றர் பரப்பு தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுதப்பட்டிருந்த நிலையிலேயே இப்போது அந்த பரப்பு 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த பகுதிக்குள் மக்கள் குடியமரமுடியாது எனவும் ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.