சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே கல்நேவ பிரதேச சபைக்குட்பட்ட சியம்பலாங்கமுவ கிராமம். இக் கிராம மக்கள் பல வருடங்களாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
இவர்களது பிரச்சினையை அறிந்த அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமான் இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக, கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்நேவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
செழிப்பானதொரு இலங்கையை உருவாக்குவதற்கு இன, மத, கட்சி பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் என்றும், இன ஒற்றுமையை மேம்படுத்த தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொள்வதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.
(அஸீம்)