Breaking
Fri. Nov 15th, 2024
பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

சியாம் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பின் பின்னர் சியாமின் தந்தை ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நீதிமன்றின் தீர்ப்பினை அவமரியாதை செய்யும் வகையில் சியாமின் தந்தை கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சியாமின் தந்தை வாஸ் குணவர்தன இந்த கொலையுடன் தொடர்புபடவில்லை என தெரிவித்திருந்தார்.

முஹமட் பவுஸ்டீன் மற்றம் கிருசாந்த கோரலகே ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும், இந்த இருவரும் அரச தரப்பு சாட்சியாளர்களாக மாறி தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டமை அநீதியானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த கருத்துக்களை வெளியிட்ட மறுநாள் (28ம் திகதி) தவறுதலாக கருத்து வெளியிட்டதாகவும், மன அழுத்தமே இதற்கான காரணம் எனவும்,  நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் சியாமின் தந்தை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை,  நீதிமன்றின் தீர்ப்பிற்கு சவால் விடுக்கும் வகையிலான கருத்துக்கள் பாரதூரமான நிலைமை எனவும் சியாமின் தந்தைக்கு எதிராக நீதிமன்ற அவதூறு செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

By

Related Post