இங்கிலாந்தில் லாப்பிங் GAS (சிரிப்பை வரழைக்கும் GAS எனப்படும்) நைட்ரஸ் ஆசிட் மோகம் அதிகமாக உள்ளது. டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை இதை சுவாசித்து மிக மகிழ்ச்சியாகவும், பேரானந்தமாகவும் இருக்க விரும்புகின்றனர்.
அதுவே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது. நைட்ரஸ் ஆசிட் உடலில் இருக்கும் ஆக்சிஜனை செயல் இழக்க செய்து உயிரை இழக்க செய்கிறது. அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
லண்டனை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் நண்பரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார்,. அதில் மிகவும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருக்க நைட்ரஸ் ஆசிட்டை (லாப்பிங் GAS) பலூனில் அடைத்து மூக்கில் வைத்து உள்நோக்கி இழுத்து சுவாசித்தார்.
அளவுக்கு அதிகமாக சுவாசித்ததால் அவர் திடீரென செயல் இழந்து மயக்க மடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்ட சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இது போன்று நைட்ரஸ் ஆசிட் சுவாசித்து கடந்த 2006 முதல் 2012–ம் ஆண்டுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, அதன் விற்பனைக்கு தடை விதிக்க அரசு தீர்மானித்துள்ளது.